தமிழ்நாடு

காக்னிசென்ட், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி வைத்த டச்..

DIN

பொருளாதார மந்த நிலையின் எதிரொலியாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு செய்யக் கூடாது என்று முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னையில் இன்று தகவல் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்து உரையாற்றினார் முதல்வர் பழனிசாமி.

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் புதிதாக 6 லட்சம் வேலை வாய்ப்புகளை தகவல் தொழில்நுட்பத் துறையில் உருவாக்கியுள்ளோம். அரசு அலுவலகங்களுக்கு மக்கள் வராமல், அரசுத் திட்டங்கள் மக்களை தேடிச் செல்லும் நிலை உருவாகி வருகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு செய்யாமல் இருக்க இந்த மாநாட்டிலேயே விவாதிக்க வேண்டும். ஆட்குறைப்பை தவிர்ப்பது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் விவாதிக்க வேண்டும். 

என்னுடைய வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் ஏராளமான நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. தமிழகத்தில் முதுலீடு செய்துள்ள மற்றும் முதலீடு செய்ய முன்வரும் தொழில்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிகளவில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக உள்ளன என்றும் முதல்வர் பேசினார்.

பொருளாதார மந்த நிலை காரணமாக, செலவைக் குறைக்கும் வகையில், காக்னிசென்ட், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் 23,000 அளவுக்கு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT