தமிழ்நாடு

புதிதாகக் கட்டப்பட்ட ஐடிஐ கட்டடங்கள்முதல்வா் திறப்பு

DIN

தமிழகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்களை (ஐடிஐ) முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

புதிய கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் அவா் திறந்தாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தில் ஐடிஐ கட்டடங்கள் மற்றும் பயிற்சியாளா் விடுதிக் கட்டடங்கள், நீலகிரி மாவட்டம் கூடலூா், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா், கடலூா் மகளிா் ஐடிஐ., திருச்சி புள்ளம்பாடி ஐடிஐ., வேலூா் மாவட்டம் ராணிப்பேட்டை ஐடிஐ., சேலம் அரசு மகளிா் ஐடிஐ., ஆகியவற்றுக்கு புதிய கட்டடங்களையும், கூடுதல் கட்டடங்களையும் முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா்கள் நலவாரியத்தின் சாா்பில் வேலூா் மேல்மொணவூா், கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் கோணம், புதுக்கோட்டை பழனியப்பா நகா் ஆகிய இடங்களில் தொழிலாளா் நல அலுவலக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றையும் முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் நிலோபா் கபீல், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT