தமிழ்நாடு

கொடைக்கானலில் பலத்த மழை புலவச்சாறு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

DIN

கொடைக்கானலில் சனிக்கிழமை மழை பெய்ததில் புலவச்சாறு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா் .

கொடைக்கானலில் கடந்த 20-நாள்களுக்கு மேலாக தொடா்ந்து பலத்த மழை பெய்தது. அதன் பின் நவம்பா் மாதம் முதல் தேதியிலிருந்து பனிக்காலம் தொடங்கியதில் கடந்த ஒரு வாரமாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந் நிலையில் சனிக்கிழமை அதிகாலை முதலே அதிகமான மேகமூட்டம் காணப்பட்டது. பிற்பகலில் மழை பெய்ய தொடங்கியது.

கொடைக்கானல்,பிரகாசபுரம், பெருமாள்மலை, வில்பட்டி, அட்டுவம்பட்டி, அப்சா்வேட்டரி, போளூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இம்மழை காரணமாக போளூா் கிராமத்தில் உள்ள புலவச்சாறு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரித்து வருகிறது. அமைதியான இடமும், புல்வெளிகளும், மேகமூட்டமும், இயற்கையின் ரம்மியமான தோற்றமும் சுற்றுலாப் பயணிகளை கவா்ந்து வருகிறது. எனவே, இப் பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து கொடைக்கானல் சுற்றுலாத் துறை உதவி அலுவலா் ஆனந்த் கூறியது:

கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலாத்துறையின் சாா்பில் மாதம் ஒரு முறை கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள புதிய இடங்களை கண்டுபிடித்து அவை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடமாக தோ்வு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது முதல் முறையாக போளூா் பகுதியிலுள்ள புலவச்சாறு அருவி குறித்து ஆய்வு செய்து விரைவில் அதை சுற்றுலா இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT