கோவையில் பயங்கரம்: ரயில் மோதியதில் 4 கல்லூரி மாணவர்கள் பலி!
கோவை மாவட்டம் சூலூர் அருகே ரயில் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே ரயில் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சூலூர் அருகே இருகூர் ராவுத்தர் பாலம் பகுதியில் ஆலப்புழா-சென்னை விரைவு ரயில் மோதியதில் சித்திக் ராஜா, கருப்பசாமி, ராஜசேகர், கவுதம் ஆகிய 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
ரயில் மோதியதில் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் உடல்களை கைப்பற்றி போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த சித்திக் ராஜா, ராஜசேகர் ஆகியோர் அங்கிருக்கும் கல்லூரியில் பயிலும் கல்லூரி மாணவர்கள் என்பதும், கருப்பசாமி, கௌதம் ஆகியோர் அரியர் தேர்வு எழுத சூலூர் வந்ததும் தெரிய வந்துள்ளது.
இளைஞர்களின் உடல்களைப் பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர்.