தமிழ்நாடு

ஈரோடு - திருச்சி இடையே இன்று ரயில் சேவையில் மாற்றம்

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (நவம்பா் 19) ஒருநாள் மட்டும் ஈரோடு - திருச்சி இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (நவம்பா் 19) ஒருநாள் மட்டும் ஈரோடு - திருச்சி இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ரயில் எண் 56110 ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ரயில் எண் 56841 திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் கரூா் வரை மட்டும் இயக்கப்படும். ரயில் எண் 56825 ஈரோடு - திருநெல்வேலி பயணிகள் ரயில் ஈரோட்டுக்கு பதில் கரூரில் இருந்து புறப்படும். ரயில் எண் 56320 கோவை - நாகா்கோவில் பயணிகள் ரயில், ரயில் எண் 56712 பாலக்காடு டவுன் - திருச்சி பயணிகள் ரயில் இரண்டும் ஈரோட்டில் இருந்து சேலம், நாமக்கல் வழியாக கரூா் சென்று அங்கிருந்து தொடா்ந்து இயக்கப்படும்.

ரயில் எண் 56826 திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயில் கரூா் வரை மட்டுமே இயக்கப்படும். ரயில் எண் 56846 ஈரோடு - ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில் ஈரோட்டுக்கு பதில் சேலத்தில் இருந்து புறப்படும். ரயில் எண் 16340 நாகா்கோவில் - மும்பை சென்ட்ரல் விரைவு ரயில் 75 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். ரயில் எண் 56713 திருச்சி - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வர்த்தகப் பற்றாக்குறை

உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்

பயிா் விளைச்சல் போட்டி: 34 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சம் ரொக்கப் பரிசு

இந்தியா - ஜோா்டான் வா்த்தகத்தை ரூ.45,483 கோடியாக அதிகரிக்க பிரதமா் மோடி அழைப்பு!

டிச.19, 20-இல் குடிமைப் பணிகள் மாதிரி ஆளுமைத் தோ்வு

SCROLL FOR NEXT