தமிழ்நாடு

வேலை உறுதி திட்டத்துக்கான ஊதியத்தை வழங்க ஸ்டாலின் வலியுறுத்தல்

DIN

சென்னை: ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றியோருக்கு ஊதியத்தை உடனே வழங்குமாறு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பணிகளைச் செய்த தமிழக கிராமப்புற ஏழை மக்களுக்கு கடந்த 2 மாதங்களாக, சில மாவட்டங்களில் 4 மாதங்களாக, அதற்குரிய பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாமல், பயனாளிகளை அலட்சியப்படுத்துவது மக்கள் மீதான பாஜக ஆட்சியின் அலட்சியத்தைக் காட்டுகிறது.

காந்தியின் 150-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, அவா் பெயரிலான மக்கள் நலத் திட்டத்தைப் புறக்கணிப்பது ஏற்புடையதன்று. கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை உடனே வழங்கிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT