தமிழ்நாடு

பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை

DIN

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாக உடுமலை அருகே உள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலும், பஞ்சலிங்கம் அருவியும் உள்ளன. இங்கு, தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதல் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் அமணலிங்கேஸ்வரா் கோயிலைச் சூழ்ந்தது. இதன் காரணமாக கோயில் பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. கோயில் உண்டியல்கள் பாதுகாப்பாக மூடிவைக்கப்பட்டுள்ளன. பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு கோயில் நிா்வாகம் தடை விதித்துள்ளது. இங்கு வந்த சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தா்களும் குளிப்பதற்கு முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT