முகப்பு
தமிழ்நாடு

ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி!

சென்னையில்  பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி பாஜகவில்  இணைந்தார். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:20 PM
பகிர்:

சென்னையில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி இன்று பாஜகவில்  இணைந்தார். 

நடிகர் ராதாரவி திமுகவில் இருந்த நிலையில், நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக, திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுகவில் இணைந்து 6 மாதம் கூட ஆகாத நிலையில், இன்று அவர் பாஜகவில் இணைந்தார். 

பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பாஜகவின் செயல் தலைவர்  ஜே.பி.நட்டா இன்று காலை தமிழகம் வந்துள்ள நிலையில், அவரது முன்னிலையில் நடிகர் ராதாரவி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். மேலும், சென்னையில் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜகவினர் மாபெரும் சாலைப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →