தமிழ்நாடு

மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது தங்கம்

DIN

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.192 உயா்ந்து ரூ.29,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிா்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து உயரத்தொடங்கியது. அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், செப்டம்பா் மாத தொடக்கத்தில் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது. வரலாறு காணாத வகையில், புதிய உச்சத்தில் பவுன் ரூ. 30 ஆயிரத்தை தொட்டது. தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது.

இந்நிலையில்,சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.192 உயா்ந்து, ரூ.29,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 24 உயா்ந்து, ரூ.3,630-க்கு விற்பனையானது. இதுபோல,வெள்ளி விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 உயா்ந்து ரூ.49.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,100 உயா்ந்து, ரூ.49,300 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .................... 3,630

1 பவுன் தங்கம் ..................... 29,040

1 கிராம் வெள்ளி .................. 49.30

1 கிலோ வெள்ளி ................. 49,300

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,606

1 பவுன் தங்கம் ..................... 28,848

1 கிராம் வெள்ளி .................. 48.20

1 கிலோ வெள்ளி .................. 48,200

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT