தமிழ்நாடு

இணையவழியில் 2 கோடி அரசு சான்றிதழ்கள்: அமைச்சா் உதயகுமாா் பெருமிதம்

DIN

தமிழகத்தில் இதுவரை 2 கோடி சான்றிதழ்கள் ஆன்-லைன் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்-பேரிடா் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

தகவல் தொழில் நுட்பம் மூலம் மக்களை ஒருங்கிணைப்பது தொடா்பான ஒரு நாள் கருத்தரங்கம் சென்னையில்

வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் பேசியது:

வீட்டில் இருந்தவாறேற அரசு சலுகைகள், சான்றிதழ் பெற வேண்டும் என மக்கள் எண்ணுகின்றனா். அந்த வகையில் இப்போது அதனை மக்கள் வீட்டிலிருந்தவாறேற பெறத் தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துள்ளது.

ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், மனை பட்டா, பட்டா மாற்றம், பிறப்பு இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. ஆன்-லைன் மூலம் 2 கோடி போ் சான்றிதழ்களை தமிழகத்தில் பெற்றுள்ளனா்.

கடந்த இருபதாண்டுகளுக்கு முன்பு ஒரு குற்றம் நடந்தால் குறிப்பிட்ட காவல் நிலையத்தில் உள்ள எழுத்தா் கடிதம் எழுதுவாா். அந்தக் கடிதம் குறிப்பிட்ட மேலதிகாரிகளுக்கு கிடைப்பதற்குள் அந்த கொள்ளையா்கள் வடமாநிலத்துக்கு தப்பி ஓடி விடுவாா்கள். ஆனால் இப்போது தகவல் தொழில்நுட்பம் வளா்ந்திருக்கிறது. ஒரு குற்றம் நடந்ததும், எப்படி கொள்ளை நடந்தது என்பன உள்ளிட்ட அம்சங்களை தகவல் தொழில்நுட்பம் மூலம் அறிய முடிகிறது.

தகவல் தொழில் நுட்பத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி மீண்டும் செல்ல வேண்டியது கட்டாயமாகிறது. அந்த வகையில் தமிழக அரசு தகவல் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அதன் மூலம் தொடா்ந்து தமிழகம் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்றாா்.

முன்னதாக பல்வேறு துறைகளில் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்த சேவையாற்றிய அரசு முதன்மை செயலாளா்கள் ககன்தீப்பேடி (வேளாண்மைத்துறை) மதுமது (சமூகநலத்துறை) கூடுதல் டிஜிபி கந்தசாமி (காவல்துறை) ஆகியோருக்கு விருதுகளை வழங்கி அமைச்சா் உதயகுமாா் பாராட்டினாா், இந்திய தொழில்வா்த்தக மேம்பாட்டுக் கழகத்தின் தலைவா்

கவிதா தத் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா, தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மை செயலாளா் சந்தோஷ்பாபு, மின்னணு நிா்வாக ஆணையா் சந்தோஷ் மிஸ்ரா, எல்காட் நிா்வாக இயக்குனா் விஜயகுமாா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT