சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையை அடுத்து, சென்னையில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான மாமல்லபுரத்தில் இன்று மாலை சந்திக்க இருக்கின்றனர். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 12 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அதேபோன்று பிற்பகல் 2 மணியளவில் சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னைக்கு வருகை தருகிறார்.
சீன அதிபரின் வருகையையொட்டி, அவர் தங்கவிருக்கும் கிண்டி முதல் விமான நிலையம் வரை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று ராஜிவ் காந்தி சாலையில் மத்திய கைலாஷ் முதல் சோழிங்கநல்லூர் வரையுள்ள சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கிண்டி முதல் சின்னமலை வரை, சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலும் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.