தமிழ்நாடு

வரவேற்புன்னா அது இப்படி இருக்கோணும்.. பாருங்க.. முழுக்க முழுக்க விடியோ!

இந்தியப் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங்  இடையிலான சந்திப்பு சென்னையின் வரலாற்று நிகழ்வாக மாறியுள்ளது.

DIN


இந்தியப் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங்  இடையிலான சந்திப்பு சென்னையின் வரலாற்று நிகழ்வாக மாறியுள்ளது.

இந்த சந்திப்புக்காக சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் இன்று சென்னை வருகை தந்துள்ளனர்.

பிரதமர் மோடிக்கும், சென்னை வந்திருக்கும் சீன அதிபருக்கும் தமிழக அரசு சார்பில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இனி வரவேற்பு என்றாலே அது தமிழகத்தில் இரு தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டதே அதுதான் வரவேற்பு என்று சொல்லும் அளவுக்கு, சென்னை விமான நிலையத்திலேயே, பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

அதுமட்டுமா? பாரம்பரிய இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விமானத்தில் இருந்து இறங்கியதும், சென்னையா அல்லது சொர்கலோகமா என்று சீன அதிபரை திகைக்க வைத்துவிட்டது இந்த கலை நிகழ்ச்சிகள்.

ஒவ்வொரு கலை நிகழ்ச்சிகளையும் நின்று நிதானமாக ரசித்துப் பார்த்த ஷி ஜின்பிங், இப்படி ஒரு வரவேற்பா என்று அசந்து போயிருப்பார். அவரை அதிசயிக்க வைக்க மாமல்லபுரத்தில் பல்லவ கால சிற்பங்களும் காத்திருக்கின்றன.

மாமல்லபுரத்தில் இரு நாட்டின் கலை, கலாசார நிகழ்வுகள் குறித்து கருத்துகளைப் பகிரும் இரு நாட்டுத் தலைவா்களும், சனிக்கிழமை நடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய சந்திப்பில் பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் திருப்பம்: கணவரால் மயக்க மருந்து செலுத்திக் கொல்லப்பட்டாரா?

மழை நின்றது: பாகிஸ்தான் வெற்றிபெற 113 ரன்கள் இலக்கு!

பாக். போலியோ பணியாளர்கள் மீது மீண்டும் தாக்குதல்! காவல் அதிகாரி சுட்டுக்கொலை!

புதுவைக் கடலில் டால்பினுடன்... சஞ்சனா திவாரி!

எனதருமை ரத்தங்களே... அரசன் புரோமா பார்த்த சிம்பு உற்சாகம்!

SCROLL FOR NEXT