தமிழ்நாடு

சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு இப்படியும் ஒரு வரவேற்பு!

DIN

சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு தேனியைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் தர்பூசணி பழத்தில் வரவேற்பு அளித்துள்ளார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி இடையிலான வரலாற்றுச் சிறப்பு சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று கோவளம் தாஜ் ஹோட்டலிலும் இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். 

இதற்காக சென்னை வந்த சீன அதிபரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் விமான நிலையத்தில் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். இதைத் தொடர்ந்து விமான நிலைய வளாகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரதநாட்டியத்தை பார்வையிட்ட ஷி ஜின்பிங், அங்கேயே சிறிது நேரம் நின்று ரசித்தார்.

இவை தவிர தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு முறையில் தமிழக மக்கள் அவரை வரவேற்றனர்.

அந்த வகையில், தேனியைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வருகையையொட்டி, அவரை வரவேற்கும் விதமாக அவரது புகைப்படத்தையும், பிரதமர் மோடியின் புகைப்படத்தையும் தர்பூசணி பழத்தில் செதுக்கியுள்ளார். அதன் கீழே ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் "இந்தியாவுக்கு வருக" என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகைப்படம்: ஏஎன்ஐ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT