தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு 

DIN

சென்னை: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக வியாழனன்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது 12 சதவீதமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக வியாழனன்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால்  அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த அக்டோபர் 9-ம் தேதி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT