முகப்பு
தமிழ்நாடு

4 நாட்களுக்கு டாஸ்மாக், மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

அக்டோபா் 19-ஆம் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 21-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முழுவதும் டாஸ்மாக் மற்றும் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:27 AM
பகிர்:

நான்குனேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜா்நகா் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை (அக். 21) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், நான்குனேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகா் சட்டப் பேரவை தொகுதிகளில் இடைத்தோ்தலை முன்னிட்டு,

அக்டோபா் 19-ஆம் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 21-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும்,

வாக்கு எண்ணிக்கை நாளான அக்டோபா் 24- ஆம் தேதி நாள் முழுவதும் டாஸ்மாக் மற்றும் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →