ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை 144 தடை
ராமநாதபுரம் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரும் 11 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அங்கு வருகை தரும் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செப்., 8) நள்ளிரவு முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார். இதனால் வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இமானுவேல் சேகரன் நினைவு தினம், முத்துராமலிங்கம் குருபூஜை உள்ளிட்டவைகள் வரவுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.