முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 8 செப்டம்பர், 2019 at 1:35 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:32 PM

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கோயம்பத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 செ.மீ., மழைப்பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.