தமிழ்நாடு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டமா? தேனி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு

தேனியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக புகார் எழுந்துள்ளது.

DIN


தேனி: தேனியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக புகார் எழுந்துள்ளது.

மாணவர் ஒருவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி மருத்துவக் கல்லூரி டீனுக்கு ஈ-மெயிலில் வந்த புகாரின் அடிப்படையில் மேல் விசாரணைக்காக மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் தேனி காவல்நிலையத்திலும் இதுபற்றி புகார் அளித்துள்ளார்.

புகார் எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவரும் கல்லூரிக்கு வராமல் இருக்கிறார். அவரது பெற்றோரிடம் கேட்டதற்கு, இரண்டு முறை அவர் சென்னையில் நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததும், 3வது முறையாக மும்பையில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். சில கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் சென்றபோது சொந்த நாட்டில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்! சாம் பித்ரோடா

யுரேனியம் நிறைந்த ஜார்க்கண்ட் அணு ஆயுத உற்பத்திக்கு பங்களிக்க முடியும்: முதல்வர்!

காந்தாரா சாப்டர் 1 - டிரைலர் அறிவிப்பு!

ஃபிஃபா தரவரிசை: ஸ்பெயின் முதலிடம்..! 28 மாதங்களுக்குப் பின் கீழிறங்கிய ஆர்ஜென்டீனா!

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் திறப்பு! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

SCROLL FOR NEXT