தமிழ்நாடு

நாங்குநேரியில் குமரி அனந்தன் போட்டி?

நாங்குநேரியில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து திங்கள்கிழமை விருப்பமனு பெறப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

DIN

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சனிக்கிழமை அறிவித்தார்.

இதையடுத்து விக்ரவாண்டியில் திமுக போட்டியிடும், நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து திங்கள்கிழமை விருப்பமனு பெறப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

இதனிடையே நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தகப்பனாருமான குமரி அனந்தன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் வருகை தந்தனர். அப்போது பெரும்பாலும் இதுபோன்ற நிகழ்வுகளின் போது பெரிதும் கலந்துகொள்ளாத குமரி அனந்தனும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலூரில் மீனவா்கள் வலையில் சிக்கிய கட்டுக்கடங்காத மீன்கள்!

நாய் கடித்து 9 போ் காயம்

கடலூரில் மதுபான தொழிற்சாலை காவலாளி கொலை: நண்பா் கைது

மனைவி மீது தாக்குதல்: கணவா் கைது

அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோவில் கைது

SCROLL FOR NEXT