தமிழ்நாடு

50 ஆயிரம் படுக்கைகளை ஏற்படுத்த 825 அரசுக் கட்டடங்கள் தயாா்: பொதுப்பணித்துறை தகவல்

DIN

கரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்காக 50 ஆயிரம் படுக்கைகளை ஏற்படுத்தும் அளவுக்கு 825 அரசுக் கட்டடங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட வாா்டுகளை அதிகப்படுத்தும் பணியை அரசு முடுக்கி விட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக

மாவட்ட வாரியாக எத்தனை கட்டடங்கள் தயாராக உள்ளன என்பது குறித்த விவரங்களைப் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக தஞ்சாவூரில் 70 கட்டடங்களும், கரூரில் 67 கட்டடங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களில் முறையே 5245, 2488 படுக்கைகளை ஏற்படுத்த முடியுமென பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இதே போன்று தமிழகத்தில் மயிலாடுதுறை உள்ளிட்ட 38 மாவட்டங்களிலும் பொதுப்பணித்துறைக்கான கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மொத்தமாக 825 கட்டடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டுகளுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களின் மொத்த பரப்பளவு 14 லட்சத்து 6 ஆயிரத்து 378 சதுர மீட்டராகும். இந்த பரப்பளவில் மொத்தமாக 50 ஆயிரத்து 852 படுக்கைகளை ஏற்படுத்த முடியுமென பொதுப்பணித்துறை மதிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT