தமிழ்நாடு

சென்னையில் ஏப்ரல் 15-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஏ.கே. விஸ்வநாதன்

DIN

சென்னை: கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையில் மட்டும் அதனை 15-ம் தேதி வரை நீட்டித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்று 8 நாட்கள் கடந்திருக்கும் நிலையில், ஏப்ரல் 14-ம் தேதியோடு ஊரடங்கு உத்தரவு நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில், சென்னையில் மட்டும் 144 தடை எனப்படும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 15-ம் தேதி காலை 6 மணிவரை நீட்டித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT