முகப்பு
தமிழ்நாடு

ராமநாதபுரம்: பணியில் சேர 250 கி.மீ. பயணித்து வந்த கர்ப்பிணி செவிலியர்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், திருச்சியில் இருந்து ராமநாதபுரத்துக்கு 250 கி.மீ. தூரம் பயணித்து வந்து பணியில் சேர்ந்துள்ளார் 8 மாத கர்ப்பிணியான செவிலியர்.

Updated On : 3 ஏப்ரல், 2020 at 12:52 PM
பகிர்:


திருச்சி: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், திருச்சியில் இருந்து ராமநாதபுரத்துக்கு 250 கி.மீ. தூரம் பயணித்து வந்து பணியில் சேர்ந்துள்ளார் 8 மாத கர்ப்பிணியான செவிலியர்.

ராமநாதபுரம் நல்வாழ்வுத் துறையின் இணை ஆணையரிடம் இருந்து, மூன்று நாட்களில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேருமாறு வந்த உத்தரவை அடுத்து, கர்ப்பிணி செவிலியர் மிக ஆபத்தான இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

விநோதினி (25), ராமநாதபுரத்தைச் சேர்ந்த இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு புதன்கிழமை மதியம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேருமாறு அழைப்பாணை வந்தது.

Advertisement

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் விநோதினிக்கு ஒப்பந்த முறையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக  பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. 

இதையடுத்து மாவட்டத்தைத் தாண்டி பயணிக்க மாவட்ட செயலாளர் உதவியுடன்  சிறப்பு அனுமதி பெற்று அவர் 250 கி.மீ. தொலைவு பயணித்து திருச்சியில் இருந்து ராமநாதபுரம் வந்து சேர்ந்தார். விநோதினியின் கணவர் ஒரு வாடகைக் காரை அமர்த்திக் கொண்டு மனைவியை ராமநாதபுரம் அழைத்து வந்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.