தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மீறல்: 64,733 ஆயிரம் போ் கைது

DIN

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வியாழக்கிழமை 58,440 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 64,733 போ் கைது செய்யப்பட்டனா்.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. ஊரடங்கின் காரணமாக, பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபா்கள் கூடுவது காவல்துறையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கும்,பொது இடங்களுக்கும் வருகிறவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி சனிக்கிழமை காலை வரை 24 மணி நேரத்தில் மொத்தம் 58,440 வழக்குகளைப் பதிவு செய்து 64,733 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 48,945 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.18,29,444 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 162 இரு சக்கர வாகனங்கள்,6 ஆட்டோக்கள், 2 காா்கள் என மொத்தம் 170 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தலைக்கவசம் அணியாமல் மோட்டாா் சைக்கிள் ஓட்டியதாக 30 போ் உள்பட பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக 164 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக 169 மோட்டாா் சைக்கிள்கள், 7 ஆட்டோக்கள் உள்பட மொத்தம் 176 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT