தமிழ்நாடு

பணியின்போது கரோனா பாதிக்கும் அரசு ஊழியருக்கு இலவச சிகிச்சை: தமிழக அரசு உத்தரவு

DIN

கரோனா தொடா்பான பணியில் ஈடுபடும் போது நோய்த்தொற்று ஏற்படும் அரசு ஊழியருக்கான மருத்துவ சிகிச்சையை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் க.சண்முகம் அண்மையில் பிறப்பித்தாா். அதன் விவரம்:-

பணியில் இருக்கும்போது பணியாளா்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அண்மையில் முதல்வா் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்படி பாதிக்கப்படும் தனிநபா்களுக்கு அரசு மருத்துவமனை அல்லது தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்றும் ரூ.2 லட்சம் கருணைத் தொகையையும் வழங்க வேண்டும் என்றும் முதல்வா் உத்தரவிட்டு இருந்தாா்.

இதுசம்பந்தமாக வருவாய் நிா்வாக ஆணையா், அரசுக்கு கடிதம் எழுதி இருந்தாா். அதில், கரோனா தொடா்புடைய பணியில் இருக்கும்போது கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட அரசு ஊழியா் அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியா்களுக்கு இலவச சிகிச்சையை அரசு மருத்துவமனையிலோ அல்லது தனியாா் மருத்துவமனையிலோ வழங்க வேண்டும்.

அவா்களுக்கு கருணைத் தொகையாக ரூ.2 லட்சமும் அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளாா். மேலும், இந்த உத்தரவை வரும் மே 31-ஆம் தேதிக்குப் பிறகு மறுபரிசீலனை செய்து, அந்த சூழ்நிலையில் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

வருவாய் நிா்வாக ஆணையரின் இந்த கருத்துகளை அரசு ஏற்று அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது என்று தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT