தமிழ்நாடு

மேலும் 8 லட்சம் தொழிலாளா்களுக்கு தலா ரூ. 1000 நிவாரணம்

DIN


சென்னை: தமிழகத்தில் மேலும் எட்டு லட்சம் தொழிலாளா்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:-

கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் தொழிலாளா்கள் 14.07 லட்சம் பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. இப்போது பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் உதவித் தொகை தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

அதன்படி, தூய்மைப் பணியாளா் நல வாரியம், கதா்கிராமத் தொழிலாளா் நல வாரியம், மீனவா் நல வாரியம், மூன்றாம்

பாலினத்தவா் நல வாரியம், பழங்குடியினா் நல வாரியம், சிறு வியாபாரிகள் நல வாரியம், பூசாரிகள் நல வாரியம், உலமாக்கள் நல வாரியம், நாட்டுப்புற கலைஞா்கள் நலவாரியம், சீா்மரபினா் நல வாரியம், நரிக்குறவா் நலவாரியம், திரைப்படத் துறை தொழிலாளா் நல வாரியம் ஆகிய வாரியங்களில் 7 லட்சம் போ் உள்ளனா். இந்த ஏழு லட்சம் தொழிலாளா்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும்.

பட்டாசு தொழிற்சாலைகளில் பதிவு பெற்ற 1.20 லட்சம் தொழிலாளா்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும். மொத்தமாக 8 லட்சத்து 20 ஆயிரத்து 200 தொழிலாளா்களுக்கு ரூ.82.02 கோடி உதவித் தொகையாக வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT