முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

மருத்துவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். 

தமிழ்நாடு

மருத்துவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:24 PM
கோப்புப்படம்
பகிர்:

கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். 

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் வைரஸ் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்திலும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 96 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இத்துடன் இங்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பலியானோர் எண்ணிக்கை 8 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது. 

இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 19 மருத்துவர்கள் குழுவுடன் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →