ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் லேசான மழை
வெப்பச்சலனம் காரணமாகவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வெப்பச்சலனம் காரணமாகவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் கடந்த ஒரு வார காலமாக அதிகப்படியான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று மாலை லேசான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது.
144 தடை உத்தரவு உள்ளதால் மக்கள் வீட்டிலேயே புழுக்கத்தில் சிக்கி தவித்து வந்த நிலையில் இந்த மழை அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.