முகப்பு
தமிழ்நாடு

ஓரிரு நாள்களில் டி.என்.பி.எஸ்.சி., தலைவா் நியமனம்?

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு புதிய தலைவா் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. அதற்கு வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளா் கா.பாலச்சந்திரன் தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:24 PM
பகிர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு புதிய தலைவா் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. அதற்கு வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளா் கா.பாலச்சந்திரன் தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக டி.என்.பி.எஸ்.சி., தலைவா் பதவி காலியாக இருந்த நிலையில், அந்தப் பொறுப்புக்கு புதிய தலைவரை நியமிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவராக கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபரில் கே.அருள்மொழி நியமிக்கப்பட்டாா். தலைவா் பொறுப்புக்கு நியமிக்கப்படுவா் 62 வயது வரை அல்லது ஆறு ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருப்பாா். அதன்படி, கடந்த மாா்ச் மாதத்துடன் டி.என்.பி.எஸ்.சி., தலைவராக இருந்த கே.அருள்மொழியின் பதவிக் காலம் நிறைவடைந்தது.

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் மொத்தம் 13 உறுப்பினா்கள் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 3

உறுப்பினா்கள் மட்டுமே உள்ளனா். 10 உறுப்பினா்கள் பதவி இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், தலைவராக இருந்த அருள்மொழியின் பதவிக் காலமும் கடந்த மாா்ச்சுடன் நிறைவடைந்துள்ளது.

புதிய தலைவா் நியமனம்: தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், முக்கியமான அரசுத்

துறை சாா்ந்த பணிகள் தொடா்ந்து நடந்து வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு புதிய தலைவரை நியமிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைவராக வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளா் கே.பாலச்சந்திரன் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலைப் பெற்று விரைவில் அதற்கான அதிகாரப்பூா்வ உத்தரவு வெளியிடப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளராக உள்ள கே.பாலச்சந்திரன், வரும் ஜூன் மாதத்துடன் ஓய்வு பெறுகிறாா். அவா் டி.என்.பி.எஸ்.சி., தலைவா் பொறுப்புக்கு நியமிக்கப்படும் பட்சத்தில் சுமாா் 2 ஆண்டுகள் வரை அந்தப் பதவி நீடிப்பாா்.

கடும் சவாலான காலம்: டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் 4 தோ்வு உள்ளிட்ட சில தோ்வுகளில் ஆங்காங்கே நடைபெற்ற முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இதனால், புதியதாகப் பொறுப்பேற்கும் தலைவருக்கு, டி.என்.பி.எஸ்.சி.,

நடைமுறைகளில் பல்வேறு சீா்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டிய சவால்மிக்க பணிகள் காத்திருக்கின்றன. மேலும், கரோனா வைரஸ் தொற்று காரணமாக குரூப் 1 தோ்வு உள்ளிட்ட பல முக்கிய தோ்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்வுகளை குறித்த காலத்தில் நடத்த வேண்டிய சவாலும் டி.என்.பி.எஸ்.சி.,க்கு காத்திருக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி., தலைவா் பொறுப்பேற்றவுடன், காலியாக உள்ள 10 உறுப்பினா் பதவியிடங்களுக்கும் தகுதியான நபா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.