முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதித்தவர்கள் விவரம்

சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:24 PM
பகிர்:

சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே  738 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்த நிலையில், இன்று மட்டும் புதிதாக 77 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதன் மூலமாக பாதிப்பு எண்ணிக்கை 911 ஆக உயர்ந்தது. சென்னையில் அதிகபட்சமாக 172 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் சென்னையில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 46 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

திருவெற்றியூர்-4
மணலி-0
மாதவரம்-3
தண்ட்டையார்பேட்டை-14
ராயபுரம்-46
திருவிக நகர் - 25
அம்பத்தூர்-0
அண்ணா நகர்-22
தேனாம்பேட்டை-12
கோடம்பாக்கம்-20
வளசரவாக்கம்-4
ஆலந்தூர்-2
அடையார்-4
பெருங்குடி 6
சோழிங்கநல்லூர்-2
மற்றவர்கள்-8

முழு கட்டுரையைப் படிக்க →