ஏப்ரல் 15-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: திமுக அறிவிப்பு
கரோனா வைரஸ் நோய்த் தொற்றில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து, மு.க. ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 15-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து, மு.க. ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 15-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில்,
"கரோனா நோய்த் தொற்றில் மத்திய - மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 15-04-2020 (புதன்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் "அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.