தமிழ்நாடு

தடைக்காலங்களிலும் தடையில்லாமல் தொடரும் மணல் கடத்தல்: அன்னவாசலில் 2 டிராக்டர் பறிமுதல்

DIN

அன்னவாசலில் மணல் கடத்திய இரண்டு டிராக்டர்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து 2-பேரை போலிஸார் கைது செய்தனர்.

அன்னவாசல் பகுதியில் ஊரடங்கையும் மீறி சிலர் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து துணைஆய்வாளர் வீரமணி தலைமையில்  போலீசார் அன்னவாசல் அருகேயுள்ள  கூத்தினிப்பட்டி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் சித்தன்னவாசல் பகுதியை சேர்ந்த அய்யாசாமி, கார்திக் ஆகிய இருவர் மீது வழக்குபதிவு செய்து கார்திகை (20) கைது செய்தனர்.

இதேபோல அன்னவாசல் அருகே  உள்ள புதுவயல் குளவாய்கருப்பர் கோவில் அருகே அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த  டிராக்டாரை பறிமுதல் செய்த போலீசார் ராப்பூசல் கீழக்களம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, வடுகப்பட்டியை சேர்ந்த ரங்கசாமி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து சத்தியமூர்த்தியை (33) கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - நாகா்கோவில், கொச்சுவேலி வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: அமைச்சரிடம் தந்தை புகாா்

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

SCROLL FOR NEXT