கறி சோறு தான் முக்கியம்: நெருக்கியடித்த ஈரோடு மக்கள்
கரோனா அச்சுறுத்தல் தொடரும் நிலையில் சமூக இடைவெளி கட்டாயம் என அரசு வலியுறுத்தி வருகிறது.
தமிழ்நாடுகறி சோறு தான் முக்கியம்: நெருக்கியடித்த ஈரோடு மக்கள்
கரோனா அச்சுறுத்தல் தொடரும் நிலையில் சமூக இடைவெளி கட்டாயம் என அரசு வலியுறுத்தி வருகிறது.
ஈரோடு: கரோனா அச்சுறுத்தல் தொடரும் நிலையில் சமூக இடைவெளி கட்டாயம் என அரசு வலியுறுத்தி வருகிறது.
ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாத ஈரோடு நகர மக்கள் இறைச்சிக் கடைகளில் முண்டியடித்துக்கொண்டு நின்றனர். நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டும் வெளியே வர வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்போது முகக் கவசங்கள், கையுறை, போதிய சமூக இடைவெளி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. ஆனால் இவற்றை எல்லாம் காற்றில் பறக்கவிடும் வகையில் ஈரோட்டில் இன்று காலை இறைச்சி வாங்க மக்கள் முண்டியடித்துக் கொண்டு நின்றனர்.
பெரும்பாலான இடங்களில் இறைச்சி வாங்க வந்தோர் முகக் கவசம் அணிந்து இருந்தாலும், டைவெளி விடாமல் முண்டியடித்துக்கொண்டு நின்று வாங்கிச்சென்றனர். ஆட்டிறைச்சி கிலோ ரூ.900-க்கும், கோழி இறைச்சி கிலோ ரூ.190-க்கு விற்பனை ஆனது. தற்போது சந்தைகள் மூடப்பட்டு இருப்பதால் ஆடுகள் கிடைப்பதில்லை எனவும் உள்ளூர் பகுதியில் தேடிப்பிடித்து ஆடுகளை வாங்கி வர வேண்டியிருப்பதால் விலை உயர்ந்து இருப்பதாகவும், இறைச்சிக்கோழி வரத்து குறைவால் அதன் விலையும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.