முகப்பு
தமிழ்நாடு

கரோனா வைரஸால் பாதித்தோரின் விவரங்களை வெளியிடக் கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம்

கரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட உத்தரவிடக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:30 PM
பகிர்:


சென்னை: கரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட உத்தரவிடக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நாராயணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு பிறப்பித்துள்ள  ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் இருந்தாலும், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பவர்கள் மூலம் மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்புள்ளது.

எனவே கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் பெயர் மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதி உள்ளிட்ட விவரங்களை அதிகாரப்பூர்வமாக அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21ஆவது பிரிவின் படி ஒருவரின் விவரங்களை வெளியிடுவது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது. 

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் பெயரை வெளியிட்டால் அதனால் சமூகத்தில் தேவையற்ற பிரச்னை ஏற்படும். மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நோயாளிகளின் பெயர்களை வெளியிடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →