முகப்பு
தமிழ்நாடு

தாய்லாந்து நாட்டினர் 6 பேருக்கும் ரம்ஜான் நோன்பு கடைப்பிடிக்க வசதிகள் செய்து தரப்படும்: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ஈரோடு:ஈரோட்டில் கரோனா பரப்பியதாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ள தாய்லாந்து நாட்டினர் 6 பேருக்கும் ரம்ஜான் நோன்பு இருக்க அனைத்து வசதிகளும் மாவட்ட காவல்துறை சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:32 PM
கோப்புப் படம்
பகிர்:

ஈரோடு:ஈரோட்டில் கரோனா பரப்பியதாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ள தாய்லாந்து நாட்டினர் 6 பேருக்கும் ரம்ஜான் நோன்பு இருக்க அனைத்து வசதிகளும் மாவட்ட காவல்துறை சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் கூறியதாவது: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 குணமடைந்து விட்டனர்.  ஆனால் அவர்கள் சுற்றுலா விசாவில் வந்து மத பிரசாரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காகவும், நோய் பரப்பியதாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது 6 பேரும் போலீஸ் காவலில், மருத்துவக் கண்காணிப்பில் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ளனர். 6 பேரையும் சென்னை புழல் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், அங்கு ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்தவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து ஈரோட்டில் உள்ள தாய்லாந்து நாட்டினரை திருச்சியில் உள்ள முகாமில் அடைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டினர் 6 பேரும் ரம்ஜான் நோன்பு இருப்பதற்காக நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தேவையான உணவுகள் மருத்துவமனையிலேயே வழங்கப்பட்டது.

அதேபோல் அவர்கள் நோன்பு முடிப்பதற்கும் மாலையில் உணவுகள் வழங்கப்பட்டது. இதேபோல் அவர்கள் ஈரோட்டில் இருக்கும் வரை நோன்பு இருக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →