தமிழ்நாடு

சிதம்பரத்தில் நடமாடும் மருத்துவ சேவை

DIN

கடலூர் மாவட்ட நிர்வாகம், பாரதிய ஜெயின் சங்கடணா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறை, சிதம்பரம் நகராட்சி இணைந்து சிதம்பரத்தில் நடமாடும் மருத்துவ சேவை தொடங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு பிஜெஎஸ் தலைவர் லோகேஷ் தலைமை வகித்தார். நடமாடும் மருத்துவ சேவையை சிதம்பரம் உதவி ஆட்சியர் விசு மகாஜன் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் கராோனா வைரஸ் நோய் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள பொது மக்கள் பயன்படும் வகையில் பொது மக்களுக்கு ஏற்படும் சாதாரண காய்ச்சல், சளி, இரும்பல் பிரச்னைகளை வீட்டிற்கே வந்து மருத்துவ பரிசோதனைகளையும், மருந்துகளையம், மருத்துவ ஆலோசனைகளையும் மருத்துவர் அமுதா தலைமையில் மருத்துவ பணியாளர்கள் வழங்குவார்கள்.

இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜெயின் சங்கடணாவை சார்ந்த மாநில செயலாளர் மகாவீர்ஜி போரா, கமல் கோத்தாரி, முன்னாள் மண்டலத் தலைவர் ராஜேந்திர குமார் கோத்தாரி, ஒருங்கிணைப்பாளர்கள் எம்.தீபக்குமார், எம்.மணிஷ்குமார் சல்லானி, பி ஜெ எஸ் செயலாளர் சுஜித் துதேரியா, பொருளாளர் பிரகாஷ் ஹபியா மற்றும் உறுப்பினர்கள்  பன்னலால், அசோக்குமார், ஜினேந்தரா, பிரகாஷ் பெயட் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT