முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல்: ரூ.3.47 கோடி அபராதம் வசூலிப்பு

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வழக்குகளில் ரூ.3.47 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:33 PM
பகிர்:

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வழக்குகளில் ரூ.3.47 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அத்தியாவசியத் தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என பொதுமக்களுக்கு அரசு மற்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேவையின்றி வெளியில் சுற்றுவோரை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர், அதிகாரிகள் ஈடுபடுவதுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 3,55,603 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 3,36,426 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், 3,01,111 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை ரூ,3,47,33,599 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →