தமிழ்நாடு

நான்கு நாள்கள் முழு ஊரடங்கு முடிந்து கடைகளுக்குத் திரண்ட சென்னைவாசிகள்

கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சென்னை மாநகராட்சியில் கடந்த நான்கு நாள்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ANI


கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சென்னை மாநகராட்சியில் கடந்த நான்கு நாள்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நான்கு நாள்கள் முழு ஊரடங்கு முடிந்து இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதலே காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. சாலைகளிலும், தெருக்களிலும் கூட ஏராளமான வாகனப் போக்குவரத்தைக் காண முடிந்தது.

கடைகளில் பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை விட்டு நிற்பதையும் காண முடிகிறது. சில பகுதிகளில் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு பொருட்களை வாங்கிச் செல்வதும் தொடர்ந்து தான் வருகிறது.

சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளிலும் 4 நாள்கள் ஊரடங்கு முடிந்து இன்று கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்றாலும், மளிகைப் பொருட்கள் தீர்ந்து போய்விடுமோ என்ற அச்சத்தில் காலையில் இருந்தே ஏராளமான மக்கள் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT