தமிழ்நாடு

சீர்காழியில் மது அருந்தும் இடமாக மாறிய பொதுக் கழிப்பிடம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

DIN

சீர்காழி நகராட்சியில் மது அருந்துபவர்களின் கூடாரம் ஆகிய  10 லட்ச ரூபாய் மதிப்பிலான நவீன கழிவறையை பயன்பாட்டிற்குக் கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட  அகரதிருகோலகா பகுதியில் 500 க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள பெரும்பாலான வீடுகளில் போதிய கழிப்பறை வசதி இல்லை.எனவே பொது கழிவறை வசதி வேண்டி இப்பகுதி மக்கள் நீண்ட கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து கடந்த 2013ஆம் ஆண்டு நம்ம டாய்லெட் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் ரூ 10 லட்சம் மதிப்பிட்டில் நவீன வசதிகள் கொண்ட இரண்டு கழிவறை மற்றும் இரண்டு குளியலறை கொண்ட கட்டிடம்  சீர்காழி நகராட்சியால் கட்டபட்டது.ஆனால் 7 ஆண்டுகளை கடந்தும் இதுவரை கழிவறைகள் பொது மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கபடவில்லை.

இது குறித்து பலமுறை சீர்காழி நகராட்சியில் மனு அளித்தும் இதுவரை திறக்க எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. மேலும் கழிவறை கட்டிடத்தில் உள்ள ஜன்னல்கள் உடைத்தும் தரைகள் சேதமடைந்து கருவேலம் காட்டுக்கு நடுவே வீணாகி புதர்கள் மண்டி காணப்படுகிறது.எனவே எழை எளிய மக்களுக்காக கட்டபட்ட நவீன கழிவறையை சீரமைத்து  பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அகதிருகோலகா பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT