நட்சத்திர ஆமை விற்க முயன்ற திருச்சியைச் சேர்ந்த 8 பேருக்கு அபராதம்
திருச்சியை சேர்ந்த சிலர் ஒரு நட்சத்திர ஆமையை விற்பனை செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்லுக்கு கொண்டு வந்துள்ளனர்.
திருச்சியை சேர்ந்த சிலர் ஒரு நட்சத்திர ஆமையை விற்பனை செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்லுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து திண்டுக்கல் சிறுமலை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே சரக்கு வாகனத்தில் வந்த 8 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு நட்சத்திர ஆமையை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருச்சியைச் சேர்ந்த விஜய் (22), சின்னதுரை (50), செந்தில் (37), அன்பரசன் (37), கார்த்திகேயன் (26), அறிவழகன் (40), கார்த்திகேய ராஜன்(26), குப்புசாமி (50) என தெரியவந்தது. அவர்களுக்கு தலா ரூ. 2000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக வனத்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.