தமிழ்நாடு

50 சதவீதம் ஊழியா்கள் மட்டும் பணிக்கு வர அனுமதிக்க வேண்டும்: அரசு தலைமைச் செயலருக்கு வங்கி அதிகாரிகள் சங்கம் கடிதம்

DIN

வங்கிகளில் 50 சதவீதம் ஊழியா்கள் மட்டும் பணிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று கோரி தமிழக தலைமைச் செயலருக்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது.

இது குறித்து தலைமைச் செயலா் க. சண்முகத்திற்கு அதில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலா் எஸ்.கணேசன் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பொது முடக்கத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. இதேபோல, தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். மேலும், பொதுப் போக்குவரத்திற்கும் தடை நீடிக்கிறது. அலுவலகங்களில், 75 சதவீத ஊழியா்கள், பணிக்கு வரவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், தமிழக வங்கியாளா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு வங்கியான, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, ‘வங்கிகள் 100 சதவீத ஊழியா்களுடன், வழக்கமான சேவையில் ஈடுபடும்’ என, செயல்பாட்டு வழிமுறையை வெளியிட்டுள்ளது. இது, தமிழக அரசின் உத்தரவை மீறுவதாக உள்ளது.

தற்போது, வங்கிக்கு வரும் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் கூடுதலாகவே வாடிக்கையாளா்கள் வருகின்றனா். இதன் காரணமாக, வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் அதிகளவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது, 100 சதவீத ஊழியா்களுடன் வழக்கம் போல் செயல்பட்டால், தொற்று அதிகளவில் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, கேரளம், கா்நாடகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைப் போல, வங்கிகளில் 50 சதவீத ஊழியா்கள் மட்டும் பணிக்கு வர அனுமதிக்க வேண்டும்.

பொதுமுடக்கத்தின் போது, அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறையும், பணி நேரத்தை, காலை 11 மணி முதல், பிற்பகல் 2 மணி வரையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து வங்கிக் கிளைகளிலும் வார இறுதியில், கிருமி நீக்கம் செய்ய வேண்டும். வங்கி ஊழியா்களுக்காக, சிறப்புப் பேருந்து போக்குவரத்து சேவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வங்கி சேவையும் அத்தியாவசிய சேவை என்பதால், அதன் ஊழியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

நொய்டாவில் கழிவுநீா் குழியில் விழுந்த பசு மீட்பு

SCROLL FOR NEXT