முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக உயர்வு

கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா், மேட்டூா் அணைக்கு நீர்வரத்து 3,625 கன அடியில் இருந்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.35 அடி உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
2-8-sl06dmettur_0611chn_121
பகிர்:


சேலம்: கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா், மேட்டூா் அணைக்கு நீர்வரத்து 3,625 கன அடியில் இருந்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.35 அடி உயர்ந்துள்ளது.

கா்நாடக மாநிலம், குடகு, மண்டியா, சாம்ராஜ் நகா் உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளத்தின் வயநாடு பகுதியிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்தும்,  கிருஷ்ணராஜசாகா் அணையிலிருந்தும் தண்ணீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக, ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்துள்ளதால், பிரதான அருவி செல்லும் நடைபாதையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புத் தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 3,625 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று மாலை மாலையில் 5,000 கன அடி வீதமாக அதிகரித்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் நீர்மட்டம் 65.55 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 28.99 டிஎம்சி ஆக உள்ளது. 

அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கரித்து வருவதால், மீனவா்கள் காவிரியில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா். செட்டிப்பட்டி, கோட்டையூா், பண்ணவாடி பரிசல் துறைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →