கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: தாய், மகன் சாவு
கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாய், மகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாய், மகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே சிலே பள்ளியைச் சேர்ந்தவர் ஜமுனா(35). இவர் இருசக்கர வாகனத்தில் அது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி வெள்ளிக்கிழமை சென்றார். வேப்பனப்பள்ளி சாலையில் தளவாய்ப்பள்ளி முனீஸ்வரன் கோவில் அருகே இவர்கள் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய் ஜமுனா(35) மகன் வெங்கடேஷ் (8) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மற்றொரு மகன் மகன் வேல்முருகன்(11) கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து குருபரப்பள்ளி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
சாலை விபத்தில் உயிரிழந்த ஜமுனாவின் கணவர் முருகேசன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஓசூரில் உள்ள ஒரு தனியார் நகை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது உயிரிழந்தார்.
முருகேசனின் உயிரிழப்பு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும் என்று ஜமுனா, கடந்த சில நாள்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.