தமிழ்நாடு

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆக. 17-ல் தொடங்கும் : அமைச்சர் செங்கோட்டையன்

DIN

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், 

அரசுப் பள்ளிகளில் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கு வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதேபோன்று 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் 22- ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்தார். 

பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், 'தமிழகத்தில் கரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையவில்லை. கரோனா வைரஸின் தாக்கம் குறைந்த பிறகு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளைக்கேட்டு, அதன்பின்னர் அனைத்துத் துறைகளுடன் முதல்வர் கலந்தாலோசித்து முடிவெடுப்பார் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT