தமிழ்நாடு

உச்சநீதிமன்றத் தீர்ப்பு பெண்களின் முன்னேற்றத்துக்கு வலுசேர்க்கும்: ஓபிஎஸ்

DIN

பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்ப்புக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்பு அளித்துள்ளார்.

இந்து வாரிசு உரிமைச் சட்டம் - 2005 நிறைவேற்றப்படுவதற்கு முன்பே பெற்றோர் இறந்துவிட்டாலும், அவர்களது சொத்தில் மகள்களுக்கு சம உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் இன்று முக்கியத் தீர்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். 

தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,  

'சமூகநீதியை நிலைநாட்டும் வகையில், உச்ச நீதிமன்றம் "பூர்வீக சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு" என்று வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்.

இத்தீர்ப்பால், சமூகநீதி நிலைநாட்டப்பட்டதுடன், பெண்கள் முன்னேற்றத்திற்கு இது மேலும் வலுசேர்ப்பதாக அமையும்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT