தமிழ்நாடு

ரூ.42 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம்

DIN

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.42 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.984 குறைந்து, ரூ.41,936-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறியீடு சரிவு உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்தது. இதையடுத்து, இதன் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்தது. இதன்பிறகு, நாள்தோறும் விலை அதிகரித்து, ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரூ.42 ஆயிரத்தையும், ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், கடந்த சனி, திங்கள் ஆகிய இரு நாள்கள் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்தது.

இதே நிலை செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது. சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.42 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.984 குறைந்து, ரூ.41,936-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.123 குறைந்து, ரூ.5,242 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 60 பைசா குறைந்து, ரூ.82.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து, ரூ.82,800 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்........................... 5,242

1 பவுன் தங்கம்............................... 41,936

1 கிராம் வெள்ளி............................. 82.80

1 கிலோ வெள்ளி.............................82,800

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,365

1 பவுன் தங்கம்............................... 42,920

1 கிராம் வெள்ளி............................. 83.40

1 கிலோ வெள்ளி............................83,400

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT