மேட்டூர் அணை: நீர்மட்டம் 100 அடியாக உயர வாய்ப்பில்லை
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிந்து வருவதால் தற்போதைக்கு அணையின் நீர் மட்டம் 100 அடியாக உயரும் வாய்ப்பு இல்லை.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிந்து வருவதால் தற்போதைக்கு அணையின் நீர் மட்டம் 100 அடியாக உயரும் வாய்ப்பு இல்லை.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்த்த பருவமழை தனிந்தது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. நீர்வரத்து குறைந்த காரணத்தால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்பட்டு வந்த உபரிநீர் குறைக்கப்பட்டது.
உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக வந்துகொண்டிருந்த நீர்வரத்து நேற்று புதன்கிழமை காலை விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாகவும் இன்று வியாழக்கிழமை காலை விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாகவும் சரிந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.