முகப்பு
தமிழ்நாடு

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவிக்கும் கரோனா தொற்று!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
பகிர்:

சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு லேசான கரோனா அறிகுறிகள் இருந்ததால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வெள்ளி மதியம் உடல்நிலை மோசமானதாகவும், அவர் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சைகள்  மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வெள்ளி இரவு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →