சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார்.
பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கரோனா தொற்று பாதிப்புடன் கடந்த 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவக் குழுவினா் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு திடீரென எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவா் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா்.
செயற்கை சுவாசம் உள்ளிட்ட உயிா் காக்கும் மருத்துவ சாதனங்களின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பிளாஸ்மா உள்ளிட்ட சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவக் குழுவினா் அவரது உடலின் ரத்த ஓட்டம் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கினர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.