மக்கள் மனதில் என்றும் கேப்டன் கூல்- ஆக இருப்பார்: தோனிக்கு ஓபிஎஸ் புகழாரம்!
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், மக்கள் மனதில் என்றும் கேப்டன் கூல்- ஆக இருப்பார் என தோனி குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், மக்கள் மனதில் என்றும் கேப்டன் கூல்- ஆக இருப்பார் என தோனி குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.
தோனியின் ஓய்வு அறிவிப்பை அடுத்து, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வரைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'எம்.எஸ். தோனி தனது கடின உழைப்பு மற்றும் மிகச்சிறந்த கிரிக்கெட் திறமையால் இந்தியா கிரிக்கெட்டில் உச்சத்தை அடைந்துள்ளது. மிகவும் நிதானமாக, பொறுமையாக இருந்து அவர் பல இக்கட்டான சூழ்நிலைகளை கையாண்டுள்ளார். பாதகமான சூழ்நிலைகளை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றுவதற்கான வழிகளைக் கண்டுபிடித்தார். அவர் எப்போதும் மக்களின் இதயத்தில் கேப்டன் கூல்- ஆக இருப்பார்!' என்று பதிவிட்டுள்ளார்.