டாஸ்மாக் கடைகள் அருகில் உள்ள பார்களை மூட உத்தரவிடக்கோரிய வழக்கு தள்ளுபடி
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அருகில் உள்ள பார்களை மூட உத்தரவிடக்கோரி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அருகில் உள்ள பார்களை மூட உத்தரவிடக்கோரி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சிலம்பரசன் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அருகில் உள்ள பார்களை மூட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில், மதுபான கடைகள் அருகில் உள்ள பார்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிக அளவில் நடக்கிறது. இதனால் விபத்துகள் நடைபெறுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதுபான கடைகள் மற்றும் பார்களை மூடுவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு. எனவே அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.